பரதேசி வழக்கமான படமல்ல… வழக்கமான பாலாவின் படமும் அல்ல… இதுவரை வந்த பாலாவின் படங்கள் மனித மனவியலின் அடிப்படையில் அமைந்த புனைவுக் கதைகளைத் தாங்கி வந்தன. செய்தியை நேரடியாக உணர்த்துவதாகவும் இருந்தன.
‘பரதேசி’யில் வரலாற்று நிகழ்வுகளைக் கதையாக அமைத்துக் கொண்டிருக்கும் பாலா, பார்வையாளனை சிந்திக்க வைத்துப் படத்தை முடித்திருக்கிறார். இதுவரை தன் படங்களில் பாலா என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தது போக, இம்முறை பாலாவின் படம் என்ன சொல்கிறது என்று பார்க்க நேர்ந்திருப்பது ஆரோக்கியமான முன்னேற்றம்.

No comments:
Post a Comment