குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் காதல் திருமணம் செய்துகொண்ட வீட்டில் சித்தார்த்தையும் காதலித்துக் கைப்பிடிக்கச் சொல்கிறது குடும்பம். வேலை பார்க்குமிடத்திலும் 'வேறு வேலைக்குத் தாவி விட மாட்டேன்...' என்கிற உத்திரவாதமாக உடன் வேலை பார்க்கும் யாரையாவது காதலிக்கத் தூண்டுகிறார் அதிகாரி.
காதலே வராத சித்தார்த்தின் மனதுக்குள் சாரலடிக்கும் விதமாக அதே கம்பெனியில் ஹன்சிகா வந்து 'ஹாட் சீட்'டில் உட்கார... குமாரும் தீயா வேலை செய்ய ஆரம்பிக்கிறார். இந்த 'தம்மாதூண்டு' கதையைத் தன் ஸ்டைலில் பிரித்து மேய்ந்து ரெண்டரை மணிநேரம் கலகலப்பூட்டுகிறார் இயக்குனர் சுந்தர்.சி(ரிப்பு மாஸ்டர்)
ஒவ்வொரு கேரக்டரையும் அறிமுகம் செய்யும் ஆரம்பத்தில் ரொம்பவும் சுமாரான ஒரு பையனைக் காட்டி "இதுதான் குமார்ன்னு சொன்னா நீங்க இப்பவே எழுந்து போயிடுவீங்கதானே...குமார் இவன் இல்ல..." என்று சொல்லி பிறகு சித்தார்த்தை அறிமுகம் செய்வது 'ஆகா... ஆரம்பம்..!'
தன் முதல் படத்திலேயே காதலுக்காக அம்மணமாக ஓடிய சித்தார்த்துக்கு காதலுக்காக எதையும் செய்யும்... கிட்டத்தட்ட 'அம்மாஞ்சி' வேடம் கச்சிதமாகப் பொருந்துகிறது. இதில் பெண்களிடம் அடி வாங்கி, கடைசியில் ஹன்சிகா தன் செருப்பைத் தூக்கிக் காட்டி விரட்டும் அளவுக்குக் காதலுக்காகக் கசிந்துருகி இருக்கிறார்.
அவர் வாழ்வில் ஹன்சிகாவும், தொடர்ந்து காதலுக்காக 'காஸ்ட்லி சர்வீஸ்' செய்யும் சந்தானமும் வரும் வரை சிக்னலுக்காகக் காத்திருக்கும் ரயிலாக நகரும் திரைக்கதை, மேற்படி பார்ட்டிகள் வந்தபின் 'துரந்தோ' வாக வேகமெடுக்கிறது.
ரசிகர்களின் ஞாபகமறதியை துணைக்கொண்டு ஏற்கனவே ஒரு படத்தில் 'நோக்கியா - கனெக்டிங் பீப்பிள்' என்று பெயர் வைத்துக் கொண்டு விவேக் செய்த காமெடியை இதில் சந்தானைத்தை வைத்து 'மோக்கியா - கனெக்டிங் பீப்பிள்' என்று மாடரேட் செய்திருக்கிறார்கள். இருந்தும் தன் ஸ்டைலில் கிடைத்த சந்து பொந்துகளில் எல்லாம் சவாரி போகிறார் சந்தானம்.
'ஹைடெக்'காக கிரெடிட் கார்டில் கூட பேமென்ட் வாங்கிக்கொள்ளும் அவர், "அடுத்து என்ன சார் செய்யணும்..?" என்று அப்பாவியாய் சித்தார்த் கேட்கும் போதெல்லாம் "ஆஆஆ... ஒண்ணுமே தெரியாதமாதிரி கேக்கற பார்... அடுத்தது பேமென்ட்தான்..!" என்று கிரெடிட் கார்டை வாங்கித் தேய்த்து தன் பேமென்ட்டை எடுத்துக்கொள்வது 'ஜாலி ரெய்ட்..!'
சாமானியர்களில் இருந்து கோலிவுட் பிரபலங்கள் வரை அவர்தான் 'காதல் டிப்ஸ்' தருபவர் என்பதன் உச்சமாக, "ஆர்யா என்னோட கிளையன்ட்தான். மாசம் ஆறு லட்சம் வரைக்கும் பேமென்ட் தருவான்..." என்பது நினைத்துச் சிரிக்க வைக்கும் ரகம்.
'பனீர் பட்டர் மசாலா' ஹன்சிகாவுக்கு வழக்கம்போல் காதலுக்கு மட்டுமே இலக்காகும் 'மோல்டிங்' வேடம். சில 'குளோஸ் அப்'களில் (ப்ப்ப்ப்ப்ப்ப்பா....) பயமுறுத்துவது தவிர அழகுச் சிலையாக வலம் வருகிறார். அவருக்கு ஏற்ற 'பட்டர் நான்' போல வரும் கணேஷ் வெங்கட்ராமின் தோற்றமும், ரொமான்டிக்' நடிப்பும் 'ரிச் ஒர்த்'. மேலும் படிக்க...





